நல்ல செய்தி! இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான படிவம் சமர்பித்தல் தேவையை இன்று முதல் (நவம்பர்.22) அரசாங்கம் ரத்து செய்கிறது..!

இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளால் ஏர் சுவிதா போர்ட்டலில் நிரப்பப்பட வேண்டிய கோவிட் தடுப்பூசிக்கான சுய அறிவிப்பு படிவங்கள் இனி தேவையில்லை என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்வதேச வருகைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நவம்பர் 22 முதல் அமலுக்கு வரும்.

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் உள்ள படிவம் உள்வரும் சர்வதேச பயணிகளுக்கு கட்டாயமாக இருந்தது. அதில், பயணிகள் தங்கள் தடுப்பூசி நிலை, பெறப்பட்ட டோஸ் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தேதிகள் உட்பட அறிவிக்க வேண்டும் என்றிருந்தது.

நேற்று (நவம்பர்.21) மாலை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து குறைந்து வரும் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பில் உலக அளவிலும் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம். ‘சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்கள்” விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், ஆன்லைன் ஏர் சுவிதா போர்டல் ஸ்டாண்டில் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிப்பது நிறுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவிட் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் விதியை மதிப்பாய்வு செய்யலாம் என்று கூறியுள்ளது.

கடந்த வாரம், விமானப் பயணத்தின் போது முகக்கவசங்களை பயன்படுத்துவது இனி கட்டாயமில்லை என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியது, ஆனால் கொரோனா வைரஸின் மற்றொரு எழுச்சி வராமல் தடுக்க பயணிகள் அவற்றைப் பயன்படுத்தலாம் என கூறியிருந்தது.

(Image credit: Hindu businessline)