2025-26க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.!!

2025-26 ம் ஆண்டுக்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஸ்லீப்பர் கோச்சுகளுடன் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 475 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ரயில்கள் வெற்றிகரமாக இங்குள்ள தடங்களில் ஓடினால் அது இந்திய தொழில்நுட்பத்தின் ஆதாரமாக இருக்கும்.

இந்திய தயாரிப்பு குறித்து உலக சந்தைகளில் நம்பிக்கையும் ஏற்படும். வந்தே பாரத் ரயில்கள் அனைத்து சர்வதேச தரத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று ஒரு மூத்த ரயீல்வே அதிகாரி ஊடகங்களிடம் கூறினார்.

இந்தியாவில் ரயில்கள் அகலப்பாதை பாதையில் ஓடுவதால், ஏற்றுமதி செய்யப்படும் ரயில்களை சோதிக்க ராஜஸ்தானில் இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்தப்படும் ரயில்வே பாதைகளையும் ரயில்வேத்துறை உருவாக்குகிறது. ஜனவரி 2024க்குள் இந்த பாதைகள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய ரயில்வே, உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து, 2025-26க்குள் இந்தியாவில், வேகத்தைக் குறைக்காமல் வளைவான பாதைகளில் இயக்கக்கூடிய ‘டில்டிங் ரயில்களை’ உருவாக்குவதற்கும் பணிபுரிந்து வருகிறது.

2025-க்குள் தயாரிக்கப்படும் 400 வந்தே பாரத் ரயில்களில் குறைந்தது 100 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Image credit: India post)