ரயில் நிலையத்தில் பேசி கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம்..!😨

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர்.7) மதியம் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) மின்சாரம் தாக்கிய பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதால் பலத்த காயம் அடைந்த அவர், கரக்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரக்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 4ல், பயணச்சீட்டு பரிசோதகரான சுஜன் சிங் சர்தார், சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அவருக்கு எதிரே நின்றிருந்த மற்ற டிக்கெட் பரிசோதகர் விலகிச் அந்த சம்பவம் நடந்த போது விலகி ஓடிவிட்டார்.

சுஜன் ரயில் பாதையில் நடைமேடையில் இருந்து விழுந்தவுடன், சில ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காரக்பூர் ரயில்வே அதிகாரி ராஜேஷ் குமார் கூறுகையில், இரண்டு கம்பிகள் வேறு ஏதோவொன்றுடன் தொடர்பு கொண்டதால் டிக்கெட் பரிசோதகருக்கு காயம் ஏற்பட்டது, அதில் ஒன்று உடைந்தது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

(டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கிய CCTV வீடியோ)

(Image credit: News18)