நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் சில மாதங்களில் மீண்டும் பறக்கும், அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர்கள் திட்டம் !!!

இந்தியாவின் பழமையான தனியார் விமானம் ஜெட் ஏர்வேஸ் தரையிறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் பறக்க முடியும் என்று புதிய உரிமையாளரான கல்ராக் கேபிட்டல் கூட்டமைப்பின் முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸின் கடன் வழங்குநர்கள் குழு தனக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர், 2020 அக்டோபரில் லண்டனின் கால்ராக் கேப்பிட்டல் மற்றும் வளைகுடாவை சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் ஆகியோரை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு முயற்சியை வென்றது.

ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல் 17, 2019 அன்று செலுத்தப்படாத நிலுவை தொகை மற்றும் பல கடன் சிக்கல்களால் பறப்பதை நிறுத்தியது, பிறகு திவால் நிலை மற்றும் திவால்நிலை குறியீட்டின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில், 25 விமானங்களை கொண்டு வர முயற்சிக்கிறோம். இதில், 18-20 சிறிய விமானங்களாகவும், 5-7 அகலமான பெரிய விமானங்களாகவும் இருக்கும். ஏற்கனவே உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் NCLT தங்கள் திட்டத்திற்கு அனுமதி வழங்கியவுடன் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக விரைவில் சர்வதேச வழித்தடங்களில் தொடங்க விரும்புகிறோம், ஆனால் நிறைய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் சர்வதேச வழிகளை தொடங்க நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். எங்கள் இலக்கு விரைவில் தொடங்க வேண்டும், நிச்சயமாக இந்த ஆண்டுக்குள், நாங்கள் சர்வதேசத்திற்கு செல்ல விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டமைப்பு ஏற்கனவே இந்தியாவின் சிவில் விமான அமைச்சகத்துடன் விமான நிலையத்தில் இடங்கள் பெறுவது தொடர்பான விவாதங்களை நடத்தியுள்ளது. சரியான விமானம் மற்றும் மனித வளங்களில் கவனம் செலுத்துவது இரண்டு முக்கியமான சவால்களாக இருக்கும் என்று ஜலான் கூறியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் 1993ல் அபுதாஹியை தளமாக கொண்ட எத்திஹாட் ஏர்வேஸுடன் இணைந்து நரேஷ் கோயலால் தொடங்கப்பட்டது. உள்நாட்டு விமான சேவையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆட்சி செய்தது, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற குறைந்த விலை நிறுவனங்கள் வரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நல்ல ஆதிக்கம் செலுத்தி வந்தது.