சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன், தங்கள் நாடுகளில் கட்டாயக் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று (டிசம்பர்.29) அறிவித்தது.
வரும் 1 ஜனவரி, 2023 முதல் பயணிகள் புறப்படுவதற்கு முன் RT-PCR சோதனை செய்து ஏர் சுவிதா போர்ட்டலில் சோதனை முடிவை பதிவேற்ற வேண்டும். இது ஏற்கனவே உள்ள 2% சர்வதேச பயணிகளுக்கான கோவிட் சோதனை என்ற தேவைக்கு கூடுதலாக பின்பற்றப்படும்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் கோவிட் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், குறிப்பாக ஆசிய நாடுகளில் உருவாகி வரும் கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு இதை கடைபிடிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில், கடந்த இரண்டு நாட்களில், 6,000 க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 39 பயணிகள் கோவிட் -19 நேர்மறை சோதனை செய்யப்பட டனர்.
(Image source: Chennai Airport:Twitter).