போபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் !!!

போபர்ஸ் கடந்த செவ்வாயன்று வெளியிட்ட இந்தியாவின் 10 பணக்கார பில்லியனர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அம்பானியின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலராகும். இந்தியா மட்டுமல்லாது ஆசியாவிலும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை பன்முகப்படுத்தியதோடு தொலை தொடர்பு மற்றும் சில்லறை விற்பனை போன்ற துறைகளிலும் தொழில் செய்கிறார், இதன் விளைவாக அவர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார்.

அம்பானிக்கு அடுத்ததாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி, HCL நிறுவனர் சிவ் நாடர் ஆகியோர் இருக்கின்றனர். ஒன்றாக சொன்னால், மூன்று பணக்கார இந்தியர்களும் போப்பர்ஸ் பத்திரிக்கை தகவல் படி 100 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு 102 ல் இருந்த மொத்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 140 ஆக உயர்ந்ததாகவும், அவர்களின் மொத்த செல்வம் கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்து உள்ளது என்றும் போப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

கவுதம் அதானியின் நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்ததால், அவர் 42 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணக்காரராக உள்ளார்.

போபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 10 செல்வந்தர்களின் முழு பட்டியலை கீழே காணாலாம்.

  • 1. முகேஷ் அம்பானி – நிகர மதிப்பு: $84.5 பில்லியன்
  • 2. கவுதம் அதானி – நிகர மதிப்பு $50.5 பில்லியன்
  • 3. சிவ நாடார் – நிகர மதிப்பு $23.5 பில்லியன்
  • 4. ராதாகிருஷ்ணன் தமனி – நிகர மதிப்பு $16.5 பில்லியன்
  • 5. உதய் கோடாக் – நிகர மதிப்பு $15.9 பில்லியன்
  • 6. லஷ்மி மிட்டல் – நிகர மதிப்பு: $14.9 பில்லியன்
  • 7. குமார் பிர்லா – நிகர மதிப்பு: $12.8 பில்லியன்
  • 8. சைரஸ் பூர்ணவாலா – நிகர மதிப்பு:$12.7 பில்லியன்
  • 9. திலிப் சங்வி – நிகர மதிப்பு: $10.9 பில்லியன்
  • 10. சுனில் மித்ரா & குடும்பம் – நிகர மதிப்பு: $10.5 பில்லியன்