சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், 10 ART சுய-சோதனை கருவிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது..!!!

சிங்கப்பூர் அஞ்சல் துறை சேவை மூலம் சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு (ART) கோவிட் சுயசோதனை கிட்களை விநியோகிக்கும் பணி தொடங்கியதாக சுகாதாரத் துறை அமைச்சர் Ong Ye Kung தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்.22) சிங்கப்பூரில் நாடளாவிய ART கிட் விநியோகத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியது. ஒவ்வொரு வீட்டிற்கான அஞ்சலக பெட்டியில் கிட்கள் வைக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 10 ART சுய-சோதனை கருவிகள் கிடைக்கும். நேற்று (அக்.22) முதல் டிசம்பர் 7 வரை மொத்தம் 15.4 மில்லியன் கிட்கள் விநியோகிக்கப்படும் என அமைச்சர தெரிவித்துள்ளார்

சுமார் 1,000 SingPost ஊழியர்கள் வரும் வாரங்களில் சுமார் 1.54 மில்லியன் வீடுகளுக்கு ART கருவிகளை கடைசி விநியோகிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொற்று இருக்கிறதா என்பதை அறிய சுய சோதனை எளிதான மற்றும் விரைவான வழியாகும். நேர்மறை முடிவு வந்து நலமாக இருந்தால், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

நேர்மறை முடிவு வந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Ong Ye Kung தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.