வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் கூடுதலாக மொத்தம் 17 குணமடைந்த தொழிலாளர்களுக்கு தொற்று

சிங்கப்பூர்: வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் கூடுதலாக மொத்தம் 17 குணமடைந்த தொழிலாளர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதாக MOH வியாழனன்று (ஏப்ரல்22) தெரிவித்தது.

முதலில் ஏப்ரல் 20, 2021 அன்று, வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் வசிக்கும் 35 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி வழக்கமான கோவிட் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த தொழிலாளி தனிமைப்படுத்தப்பட்டு, அந்த தங்குமிடம் மற்றும் வேலையிடத்தில் அவரது நெருங்கிய தொடர்புகளையும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் தொற்று உறுதிபடுத்தப்பட்ட தொழிலாளியுடன் ஒரே அறையில் இருக்கும் ஒருவருக்கும் பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் இருந்த போது கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்குமிடத்தில் சிறப்பு கௌவிட்-19 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

22 ஏப்ரல் 2021 நிலவரப்படி, முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாளரை விட கூடுதலாக மொத்தம் 17 குணமடைந்த தொழிலாளர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,

இந்த வழக்குகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு என்சிஐடிக்கு அனுப்பப்பட்டனர். MOH, NCID மற்றும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநர்களை கொண்ட ஒரு நிபுணர் குழுவுடன் சேர்ந்து, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று பரவுவது பற்றி ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையில், தொற்று பரவுவதை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொது சுகாதார நடவடிக்கைகள் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவுகளை விதிப்பது மற்றும் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை முழு தங்குமிடத்திற்கும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என MOH கூறியுள்ளது.

(Image credit: Yahoo via Reuters)