சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை – அமைச்சர் ஆங் யீ கங்

சிங்கப்பூர்: 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் கோவிட் -19 தடுப்பூசி இன்னும் பெறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசிக்கு பிறகு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று கவலைப்படுவதாக பொதுவான காரணமாக இருக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசிகளுடன் அல்லது இல்லாமலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் இயற்கையாகவே நிகழ்கின்றன. கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு பிறகு இதுபோன்ற நோய்களுக்கு அதிகரித்துள்ள என்று பார்க்க, கடந்த 3.5 ஆண்டுகளில் பொது மருத்துவமனைகளின் தரவுகளை அமைச்சர் சரி பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

சில ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்க போதிலும், எண்கள் சீராக இருந்தன.

அமைச்சர் வெளியிட்ட மாரடைப்பு தரவுகளுக்கான வரைபடம்

இந்த எண்கள் முதியவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன அமைதியை அளித்து அவர்கள் தடுப்பூசிகளை எடுத்து கொள்ள முன் வருவார்கள் என நம்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தடுப்பூசி மையங்களைத் தவிர, முதியவர்கள் இப்போது பொது சுகாதார கிளினிக்குகள் (PHPC கள்) அல்லது பாலி க்ளினிக்குகள் ஆகியவற்றில் தங்கள் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசியை பெறலாம். அவர்கள் பதிவு செய்ய தேவையில்லை.

மேலும் வீட்டிலேயே உள்ள முதியவர்கள் தங்கள் தடுப்பூசிகளை வீட்டிலேயே போட்டு கொள்ள ஏற்பாடு செய்ய. 1800-650-6060 என்ற எண்ணை அழைக்கவும் அமைச்சர் வேண்டிகோள் விடுத்துள்ளார்.

(Image credit: Yahoo)