பாசிர் பஞ்சாங் ரெஸிடன்ஸ் தங்குமிடத்தில் உள்ள இரண்டு தொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்: மே 1 அன்று வெளியிட்ட கோவிட் தொற்று பற்றிய அறிக்கையில் 2 தங்குமிட தொற்றுகள் உட்பட 9 சமூக தொற்றுகளும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 25 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. இரண்டு தங்குமிட தொற்றுகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

வழக்கு 62691, 35 வயதான ஆண் மியான்மர் நாட்டவர். இவர் 2020 ஜனவரி மாதம் சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் வந்தவர். அவர் பசீர் பஞ்சாங் டெர்மினல் மற்றும் பிரானி டெர்மினலில் பணிபுரிகிறார். அவர் பாசிர் பஞ்சாங் ரெஸிடன்ஸ் என்ற தங்குமிடத்தில் (33 ஹார்பர் டிரைவ்) வசிக்கிறார்.

ஏப்ரல் 28 அன்று செய்யப்பட்ட வழக்கமான சோதனை (RRT) யின் முடிவில் அவருக்கு கோவிட் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கடைசியாக ஏப்ரல் 13 அன்று செய்யப்பட்ட சோதனையில் கோவிட் இல்லை.

அவரது செரோலஜி சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தது. ஜனவரி 14 அன்று முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியையும், பிப்ரவரி 3 அன்று இரண்டாவது டோஸையும் போட்டுக்கொண்டார்.

வழக்கு 62684, 23 வயதான இந்தியா நாட்டஐ சேர்ந்த ஆடவராவார். இவர் 2020 டிசம்பர் மாதம் சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் வந்தவர். பசீர் பஞ்சாங் முனையத்தில் ஒரு ஸ்டீவடோராக பணிபுரிகிறார், மேலும் பாசிர் பஞ்சாங் ரெஸிடன்ஸ் தங்குமிடத்தில் (33 ஹார்பர் டிரைவ்) வசிக்கிறார்.

வழக்கு 62691 கண்டறியப்பட்டதை தொடர்ந்து தொடர் சோதனைகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் 29 அன்று அவர் சோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. கடைசியாக ஏப்ரல் 28 அன்று அவருக்கு செய்த வழக்கமான சோதனையல் (RRT) தொற்று இல்லை.

அவரது செரோலஜி சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தது. ஜனவரி 30 அன்று கோவிட் தடுப்பூசி முதல் டோஸையும், பிப்ரவரி 22 அன்று இரண்டாவது டோஸையும் போட்டுக்கொண்டார்.