சிங்கப்பூரில் நேற்று (செப்.25) புதிதாக 1443 தொற்றுகள், கோவிட் பாதிக்கப்பட்டிருந்த மேலும் மூன்று முதியவர்கள் காலமானார்கள்

சிங்கப்பூர்: கோவிட் பாதித்தவர்களில் மேலும் மூன்று முதியவர்கள் நேற்று (செப். 25) காலமானதாகவும், புதிதாக 1443 தொற்றுகள் கண்டறியப்பட்டதாகவும் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சகம் (MOH ) தெரிவித்துள்ளது.

62 வயதான ஆண் சிங்கப்பூரர், 25 செப்டம்பர் அன்று கோவிட் -19 தொற்று காரணமாக காலமானார். அவருக்கு செப்டம்பர் 6 அன்று கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது.

இரண்டாவதாக 71 வயதான ஆண் சிங்கப்பூரர், 24 செப்டம்பர் அன்று கோவிட் தொற்று காரணமாக காலமானார். அவருக்கு செப்டம்பர் 8 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போட்டிருந்தார், மேலும் ஏட்ரியல் பைப்ரிலேஷன், தைரோடாக்சிகோசிஸ் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது, இது அவரது முதிர்ந்த வயதோடு சேர்ந்து, அவரை கடுமையான நோய்களுக்கு ஆளாக்கியதாக MOH தெரிவித்துள்ளது.

71 வயதான பெண் சிங்கப்பூர், 25 செப்டம்பர் அன்று கோவிட்-19 தொற்று காரணமாக காலமானார். அவர் செப்டம்பர் 14 அன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடவில்லை, நீரிழிவு, இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது.

மொத்தத்தில், சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று காரணமாக இருந்து 76 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH ) தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)