சிங்கப்பூரில் புதிதாக 1650 தொற்றுகள், கோவிட் பாதிக்கப்பட்டிருந்த மேலும் மூன்று முதியவர்கள் நேற்று (செப். 24) காலமானார்கள்

சிங்கப்பூர்: கோவிட் பாதித்தவர்களில் மேலும் மூன்று முதியவர்கள் நேற்று (செப். 24) காலமானதாகவும், புதிதாக 1650 தொற்றுகள் கண்டறியப்பட்டதாகவும் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சகம் (MOH ) தெரிவித்துள்ளது.

79 வயதான ஆண் சிங்கப்பூரர், 24 செப்டம்பர் அன்று கோவிட்-19 தொற்று காரணமாக காலமானார். அவருக்கு செப்டம்பர் 8 அன்று செய்யப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவிட் -19 தடுப்பூசி போடவில்லை. மேலும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், கிரேவ்ஸ் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது.

மேலும் 83 வயதான ஆண் சிங்கப்பூரர், நேற்று (செப்.24) கோவிட்-19 தொற்று காரணமாக காலமானார். அவருக்கு செப்டம்பர் 14 அன்று சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது, மேலும் நீரிழிவு நோய், கட்டுப்படுத்தப்பட்ட நுரையீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது, இது அவரது முதிர்ந்த வயதோடு சேர்ந்து, அவரை கடுமையான நோய்களுக்கு ஆளாக்கியதாக MOH கூறியுள்ளது.

மூன்றாவதாக 86 வயதான ஆண் சிங்கப்பூரர், நேற்று (செப்.24) கோவிட்-19 தொற்று காரணமாக காலமானார். அவருக்கு செப்டம்பர் 16 அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தார். அவருக்கு நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், இஸ்கிமிக் இதய நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளின் வரலாறு இருந்தது, இது அவரது முதிர்ந்த வயதோடு சேர்ந்து, அவரை கடுமையான நோய்களுக்கு ஆளாக்கியதாக MOH கூறியுள்ளது

மொத்தமாக, சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று காரணமாக 73 பேர் உயிரிழந்துள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

((Image credit: Reuters)