முழுமையாக தடுப்பூசி் போட்டிருந்த ஒரு தங்குமிட தொழிலாளர் உட்பட 3 பேருக்கு புதிய சமுக தொற்றுகள் !!!

சிங்கப்பூர்: நேற்று (ஏப்ரல் 23) தங்குமிடத்தில் ஒருவருக்கும், சமூகத்தில் இருவருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 36 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக MOH கூறியுள்ளது. அதில் இருவர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள், ஒருவர் ஒரு டோஸ் மட்டும் பெற்றவர் என தெரிய வந்துள்ளது. தொற்றின் விவரங்கள் பின் வருமாறு:

வழக்கு 62273, 21 வயதான இந்திய ஆடவராவார், 2018 அக்டோபர் மாதம் சிங்கப்பூருக்கு வந்த வேலை அனுமதியில் வந்தவர். இவர் செம்ப்கார்ப் மரைன் ஒருங்கிணைந்த யார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் SCM துவாஸ் லாட்ஜில் (80 Tuas South Boulevard) தங்கியுள்ளார்.

19 ஏப்ரல் அன்று வழக்கமான சோதனையின் போது அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு ஏப்ரல் 12 அன்று கடைசியாக நடந்த சோதனையில் தொற்று கண்டறியப்படவில்லை. மார்ச் 11 அன்று அவரது கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸையும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 1 அன்றும் பெற்றார். செரோலஜி சோதனை முடிவு பாஸிடிவ் என வந்தது என MOH கூறியுள்ளது.

வழக்கு 62285, 33 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர் ஆடவராவார். இவர் ஒரு கப்பலில் பணிபுரிகிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தோனேசியாவிலிருந்து விமானம் மூலம் வந்த அவர், ஒரு பிரத்யேக வசதியில் இருந்தார், அங்கு நடந்த சோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை.

பிப்ரவரி 18 அன்று அவர் கப்பலில் ஏறினார், மேலும் கோவிட்-19 தடுப்பூசிக்கு சென்றதை தவிர கப்பலை விட்டு இறங்கவில்லை. மெரைன் ஊழியர்களுக்கான கோவிட் சோதனை ஒரு பகுதியாக ஏப்ரல் 20 அன்று அவர் கப்பலில் சோதனை செய்யப்பட்ட போது் கோவிட் உறுதி செய்யப்பட்டது.

அந்த நபர் ஏப்ரல் 16 அன்று கோவிட் -19 தடுப்பூசியின் தனது முதல் டோஸை மட்டும் பெற்றிருந்தார். இரண்டாவது டோஸ் போடுவதற்கு இடைவெளி தேவை, மேலும் முழு தடுப்பூசிக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கவும் நாட்கள் ஆகும்.

வழக்கு 62294, 38 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர், ஒரு குறுகிய கால பார்வையாளார். அவர் ஒரு வேலை திட்டத்திற்காக(Project) சிங்கப்பூரில் இருக்கிறார். மார்ச் 28 அன்று இந்தோனேசியாவிலிருந்து வந்த அவர், ஏப்ரல் 11 வரை ஒரு பிரத்யேக நிலையத்தில் SHNல் இருந்தார். அங்கு நடந்த சோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை.

இந்தோனேசியாவிற்கான தனது பயணத்திற்காக ஏப்ரல் 22 அன்று அவர் புறப்படுவதற்கு முன் கோஈவிட்-19 சோதனை எடுத்தபோது.தொற்று கண்டறியப்பட்டது. அவரது செரோலஜி சோதனை முடிவு பாஸிடிவ் என வந்துள்ளது. அவர் இந்தோனேசியாவில் மார்ச் 4ம் தேதி கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸையும், இரண்டாவது டோஸை மார்ச் 18 அன்றும் பெற்றிருந்தார் என்றும் MOH அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(Image: SCM lodge, Tuas, source: Google map)