வார இறுதியில் நடந்த அமலாக்க சோதனையில் சாலை விதிகளை மீறிய 34 பேர் பிடிபட்டனர் – LTA

சிங்கப்பூர்: போக்குவரத்து அமலாக்க அதிகாரிகளின் சோதனையில் வார இறுதியில் (ஏப்ரல் 17&18) 34 பேர் விதிகளை மீறியதற்காக பிடிபட்டதாக நில போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்தது.

சாலை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பை செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் அமலாக்க பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த அமலாக்க பணியின் போது, மிதி வண்டி ஒட்டுபவர்களை மையமாக கொள்ளப்பட்டார்கள்.

AYE மற்றும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையிலிருந்து புக்கிட் திமா மற்றும் தனா மேரா கடற்கரை சாலை வரை, பாதுகாப்பான சைக்கிள் ஓட்டுதல் பற்றிய செய்தியை மக்களடத்தில்ல் பகிரப்பட்டது. மேலும் தவறான சைக்கிள் ஓட்டியவர்களும் அப்பணிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பெரும்பாலானவர்கள் சட்டத்தை மதித்திருந்தாலும், ஹெல்மெட் இல்லாமல் சாலையில் சவாரி செய்த 16 சைக்கிள் ஓட்டுநர்களையும், மேலும் 16 பேர் சிவப்பு விளக்கை மீறியதையும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இருவர் போக்குவரத்தின் ஓட்டத்திற்கு எதிராக சவாரி செய்தனர். மொத்தம் 34 பேர் விதிகளை மீறியதற்காக பிடிபட்டனர்.

சைக்கிள் ஓட்டுதல் என்பது சிங்கப்பூரை சுற்றிவர ஒரு சிறந்த வழியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பயணத்தை அதிகமானவர்கள் மேற்கொண்டு வருவதை கண்டு LTA மகிழ்ச்சியடைகிறுது.

ஆனால் சாலைகளில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க விதிகளை, கடைப்பிடிக்குமாறு LTA நினைவுபடுத்தியுள்ளது.