சிங்கப்பூரில் கோவிட் பாதிப்பின் சிக்கல்களினால் 44 வயதான ஆடவர் ஒருவர் காலமானார் – MOH

சிங்கப்பூர்: அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிரந்தர வாசி ஆடவர் ஒருவர் காலமானதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது.

வழக்கு 63752, 44 வயதான ஆண் சிங்கப்பூர் நிரந்தர வாசி, ஜூன் 20 அன்று காலமானார் என்று MOH கூறியுள்ளது. இவரோடு சிங்கப்பூரில் கோவிட்டால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆனது.

அவர் மே 25 அன்று அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மே 26ம் தேதி கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் கோவிட்-19 தடுப்பூசி பெறாமல் இருந்துள்ளார், மேலும் அவருக்கு நீரிழிவு நோயின் வரலாறு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வருவதாக MOH கூறியுள்ளது.

(Image credit: Alexandra hospital – FB)