சிங்கப்பூர்: குடும்ப சந்திப்புகளில் பங்கேற்ற 5 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது, விதிகள் மீறப்பட்டதா என MOH விசாரணை

5 தொற்றுகள் 2 வீடுகள் சம்பந்தப்பட்ட குடும்ப தொகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு ஞாயிறு இரவு (ஆக.30) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வீடுகளை சேர்ந்த 5 நபர்கள் குடும்ப சந்திப்புகளில் பங்கேற்றனர், மேலும் பாதுகாப்பான தொலைதூர விதிகளை இவர்கள் மீறியிருக்கின்றனரா என்று விசாரணைகள் நடந்து வருகின்றன. இத்தகைய விதி மீறல்களை MOH தீவிரமாக எடுத்து கொள்கிறது, விதியை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என MOH கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 7 வெளிநாட்டில் இருந்து திரும்பிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன. அவற்றில் 5 பேர் சமீபத்தில் பங்களாதேஷ், இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இன்னொரு நபர் பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய வேலை அனுமதி பெற்றவர், மற்றொருவர் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய சார்ந்துள்ள தங்கும் அனுமதி வைத்திருப்பவராவார் என தெரியவந்துள்ளது.

சமூக பரவலை பொறுத்தவரை மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அதில் 5 பேர் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள், ஒருவர் தானாக முன் வந்து சோதனைக்கு சென்றதில் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

சமுக பரவலில் கண்டறியப்பட்டவர்களில் இன்னொருவர் நபர் ‘SLR revolution’ கடையில் வேலை பார்ப்பவர், இவருடன் பணி புரியும் இன்னொருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர். இதை தவிர இன்னொரு தொற்று தங்குமிடங்களுக்கு வெளியே தங்கியுள்ள ஒரு வேலை அனுமதி பெற்றவருக்கு வழக்கமான சோதனையின் போது உறுதிபடுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்ட தொற்றுக்களில் மற்றவை தங்குமிடங்களில் கண்டறியப்பட்டவை. 39 தொற்றுகள் உறுதிபடுத்தப்பட்டது என்ற தகவலை சுகாதார அமைச்சு ஞாயிறு இரவு வெளியிட்டது.

(Image courtesy: Npark)