வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் உள்ள மேலும் 5 குணமடைந்த தொழிலாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது !!!

சிங்கப்பூர்:வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் வசிப்பவர்களை சோதித்ததில் மேலும் 5 குணமடைந்த தொழிலாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதுவரை, தொற்று ஏற்பட்டு குணமடைந்த 24 தொழிலாளர்களுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த வழக்குகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு அனுப்பப்பட்டன.

MOH, தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு நிபுணர் குழுவுடன் சேர்ந்து, இந்த தொற்றுகள் பற்றி மதிப்பீடு செய்து ஆராய்ந்தன.

24 வழக்குகளில், 11 வழக்குகளில் வைரஸ் துண்டுகள் சிதறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன, மேலும் 5 வழக்குகள் கோவிட்-19 மறு தொற்றுகளாக இருக்கலாம்.

கோவிட்-19 மறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேலும் இரண்டு வழக்குகள் நெகட்டிவ் என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 6 வழக்குகள் நிபுணர் குழுவின் மதிப்பீட்டில் நிலுவையில் உள்ளன.

5 மறு தொற்று வழக்குகள் அனைத்தும் வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில், 62181 மற்றும் 62225 வழக்குகள் ஆகியவற்றுடன் ஒரே அறையில் இருந்துள்ளனர்.

மறு நோய்த்தொற்று வழக்குகளில், 2 சமீபத்தில் ஏப்ரல் 6 அன்று பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள். தொற்றுநோயியல் விசாரணைகள் படி வெளிநாட்டில் இருக்கும்போது அந்த இருவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும்.

இவர்கள் அறையில் இருந்த மற்றவர்களுக்கு தொற்றுநோயை பரப்பியருக்கலாம். இதனால் அவர்களின் வேலையிடத்திலும் மேலும் தொற்றுநோயியல் விசாரணைகள் நடந்து வருவதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

(Image credit : Yahoo via Reuters)