TTSH மருத்துவமனையில் 5 நோயாளிகள், 3 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது!!!

சிங்கப்பூர்: நேற்று (மே.3) TTSH மருத்துவமனை வழக்குகளுடன் தொடர்புள்ள 8 தொற்றுகள், ICA வழக்குடன் தொடர்புள்ள 2 தொற்றுகள் உட்பட சமூகத்தில் 10 கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு (MOH) மே 3ம் தேதி இரவு வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

62786, 62787, 62791, 62794 மற்றும் 62795 ஆகிய 5 வழக்குகள் TTSH வார்டு 9 டி-யில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளாவார்கள்.

ஏப்ரல் 28 அன்று அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக தேசிய தொற்று நோய்களுக்கான மையத்திற்கு (NCID) மாற்றப்பட்டனர், அவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

62781, 62784 மற்றும் 62790 வழக்குகள் TTSH மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள். மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களையும் TTSH சோதனை செய்த போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வழக்கு 62779 ஒரு 37 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேரந்த பெண் ஆவார், மற்றும் வழக்கு 62780, 3 வயது ஆண் சிங்கப்பூரர் ஆவார். வழக்கு 62779 வழக்கு 62571 ன் துணைவியார். வழக்கு 62780 அவர்களின் குழந்தை. இந்த வழக்குகள் ICA அதிகாரி வழக்குடன் தொடர்புடையவாகும்.

வழக்கு 62517 ன் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டதால், வழக்கு 62779 மற்றும் 62780 ஆகியவை ஏப்ரல் 27 அன்று தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 28 அன்று தனிமைப்படுத்தலின் போது அவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது, அவற்றின் முடிவுகள் நெகட்டீவ் ஆக இருந்தன. மே 1 அன்று, அவர்களை மீண்டும் சோதனை செய்த போது தொற்று உறுதியானது என MOH தெரிவித்துள்ளது.