தொழிலாளர் தங்குமிடம் ஒன்றில் 8 தொற்றுகள், புதிய க்ளஸ்டராக அறிவிக்கப்பட்டது

சிங்கப்பூரில் 139 புதிய கோவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டதாக, சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (ஜூலை 27) தெரிவித்திருந்தது.

சமூக பரவுலில் மட்டும் 136 தொற்றுகள் கண்டறியப்பட்டன, அவற்றில் 8 தொற்றுகள் வெஸ்ட்லைட் ஜூனிபர் தங்குமிட தொழிலாளர்களுக்கு கண்டறியப்பட்டது.

இதை ஒரு புதிய க்ளஸ்டராக அறிவித்ததோடு் தங்குமிடத்தில் கண்டறியப்பட்ட 8 தொற்றுகளும் தொடர்புடைய தொற்றுகள் என்று MOH தெரிவித்துள்ளது. இந்த க்ளஸ்டரில் மொத்தம் 9 தொற்றுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிவிக்கப்பட்ட புதிய கிளஸ்டர்களில் புங்கோல் தொடக்க பள்ளியில் ஒரு சுகாதார பணியாளருடன் தொடர்புடைய நான்கு தொற்றுகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற தொடர்புடைய 81 சமூக தொற்றுகளில், 36 ஜுராங் மீன் வள துறைமுக கிளஸ்டருடன் தொடர்புடையவை. இரண்டு தொற்றுகள் கேடிவி கிளஸ்டருடன் தொடர்புடையவை. 55 தொடர்பல்லாத தொற்றுகளாகும்.

இவற்றில் 70 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாத அல்லது ஒரு தடுப்பூசி போடப்பட்ட 3 முதியவர்கள் அடங்குவர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 3 தொற்றுகளும் கண்டறியப்பட்டன, அவற்றில் இரண்டு சிங்கப்பூர் வந்தவுடன் கண்டறியப்பட்டன, மற்றொன்று தனிமைப்படுத்தலின் போது கண்டறியப்பட்டது.