TTSH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 88 வயது மூதாட்டி, கோவிட் சிக்கல்களினால் மரணமடைந்தார்

88 வயதான சிங்கப்பூரர் மூதாட்டி ஒருவர் கோவிட் -19 காரணமாக மே 1 அன்று காலமானாதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று்(மே 1) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது

அவர் ஏப்ரல் 14 முதல் டான் டெக் செங் (TTSH) மருத்துவமனை வார்டு 9 Dல் சிகிச்சைக்காக தங்கியிருந்தார், அவருக்கு ஏப்ரல் 28ம் தேதி கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா ஆகியவற்றின் வரலாறு அவருக்கு இருந்தது. சிங்கப்பூரில் மே 1 ம் தேதி வரை மொத்தம் 31 பேர் கோவிட் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

NCID அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக MOH தெரிவித்துள்ளது. கடைசியாக மார்ச் மாதம் கோவிட் சிக்கல்களினால் 61 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.

டான் டெக் செங் (TTSH) மருத்துவமனையில் உள்ள வார்டு 9D ல் பணிபுரிந்த செவிலியர் ஒருவருக்கு ஏப்ரல் 27ம் தேதி தொற்று கண்டறிப்பட்டதையடுத்து நடந்த தொடர் சோதனையில் மேலும் பல தொற்றுகள் கண்டறியப்படன.

மருத்துவமனையில் க்ளஸ்டர் உருவானதையடுத்து் அங்குள்ள 4 வார்டுகள் மூடப்பட்டன, மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

(Image: NCID, source: Google map)