அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு MOH அறிவுறுத்தல் !!!

சிங்கப்பூர்: சமூக தொற்றுகள் மற்றும் டான் டெக் செங் மருத்துவமனையில் (TTSH) கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு திறன் மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம்(MOH) கூறியுள்ளது.

கடந்த மே 2 முதல், TTSH மருத்துவமனை புதிய உள்நோயாளிகளுக்கான சேர்க்கைகளை படிப்படியாக நிறுத்திவிட்டது. அனைத்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை ஆம்புலன்ஸ் மூலம் வரும் வழக்குகள் சமநிலை நோக்கத்திற்காக பிற பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு திருப்பி விடப்படும் என கூறப்பட்டுள்ளது.

நேரில் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு, வழக்கு 62541 கிளஸ்டருடன் தொடர்பில்லாத ஊழியர்கள் அவர்களை பார்க்க TTSH ஏற்பாடு செய்யும்.

அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் மற்றும் சேர்க்கை மற்றும் அவசரம் இல்லாத நியமனங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்குமாறு அனைத்து மருத்துவமனைகளையும் MOH கேட்டு கொண்டுள்ளது.

இந்த ஒத்திவைப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகள் தொடர்பு கொள்ளும். தற்போதைய நிலைமை சீராகும் வரை தொலைதொடர்பு மற்றும் மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதில் நோயாளிகளுடன் நெருக்கமாக பணியாற்ற மருத்துவமனைகளின் சுகாதார குழுக்களை MOH கேட்டு கொண்டுள்ளது.

அவசரகால மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லுமாறு MOH பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. நெஞ்சு வலி, மூச்சு திணறல், திடீர் பலவீனம் மற்றும் உணர்வின்மை, கடுமையான காயங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

TTSH மருத்துவமனைக்கு மற்ற மருத்துவமனைகள் உதவி வருவதால், நீண்ட காத்திருப்பு நேரம் எதிர்பார்க்கப்படுகிறது. அவசரம் இல்லாத நிலைமைகளை கொண்ட பொது உறுப்பினர்கள் முதலில் தனியார் க்ளினிக் பொது மருத்துவர்கள் அல்லது பாலிக்ளினிக் மருத்துவர்களை பார்க்க வேண்டும்.

(Image source: NUH)