சிங்கப்பூரின் அனைத்து நகரங்களிலும் மார்ச் மாத இறுதிக்குள் கோவிட் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து நகரங்களிலும் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று வர்த்தக மற்றும் தொழிற்த்துறை அமைச்சர் சான் சன் சிங் நேற்று (ஜனவரி.26) தெரிவித்தார்.

ஆங் மோ கியோ மற்றும் டான்ஜோங் பகரில் வசிக்கும் முதியவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் பணி இன்று (ஐனவரி.27) தொடங்குகிறது. இந்த இரண்டு பகுதிகளில் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பதால் இங்கு தொடங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதையொட்டிய ஏற்பாடுகளை சரிபார்க்கவும், மக்கள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஊழியர்கள், சமூக தொண்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் எவ்வாறு தயாராகி வருகிறார்கள் என்பதை பார்க்கவும் நேற்று (ஐனவரி.26) பிற்பகல் டான்ஜோங் பகர் சமூக மன்றத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஒன்றை அமைச்சர் சான் சன் சிங் பார்வையிட்டார்

இந்த தடுப்பூசி மையம் ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் வயதான முதியவர்களுக்கு விரைவு பாதைகள் மற்றும் அகலமான சாவடிகள் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மார்ச் மாத இறுதிக்குள் அதிகமான சமூக மன்றங்கள் தடுப்பூசி மையங்களை சிங்கப்பூரில் உள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கும், இதனால் மருத்துவ தகுதி வாய்ந்த அனைத்து குடியிருப்பாளர்களும் தங்களது தடுப்பூசிகளை வசதியாக பெற முடியும் என்று அமைச்சர் கூறினார்.

தடுப்பூசி பெறுவதற்கான அழைப்பு கடிதங்கள் நேற்று வெளிவந்ததால், சமூக தடுப்பூசி பயிற்சியின் முதல் நாளுக்காக இதுவரை சுமார் 300 முன்பதிவுகளை டான்ஜோங் பகர் சமூக மன்றம் பெற்றுள்ளது. இது ஊக்கமளிக்கிறது, மேலும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் நம்பிக்கை அளவு அதிகரிக்கிறது.

தற்போது, இந்த சமூக நலன் சார்ந்த முயற்சிகளுக்கு உதவ சுமார் 650 தன்னார்வலர்கள் உள்ளனர். முதியவர்களுக்கு தடுப்பூசி நேரம் முன் பதிவு செய்வதிலும், அவர்களுடன் தகவல்களை பகிர்வதிலும், அவர்களிடம் ஏதேனும் கேள்விகளுக்கு தீர்வு காணவும் அவர்கள் உதவுவார்கள். இந்த முயற்சியில் மேலும் தன்னார்வலர்கள் எங்களுடன் சேருவார்கள் என்று நம்புவதாக அமைச்சர் சான் சன் சிங் குறிப்பிட்டார்.

(Image source: Minister Chan Chun Sing -FB)