கூடைப்பந்து வளைய அமைப்பு சரிந்து கீழே விழுந்ததில் 17 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்தார் 😨

சிங்கப்பூர்: கூடைப்பந்து வளைய அமைப்பு 17 வயது இளைஞர் மீது விழுந்ததை அடுத்து திங்கள்கிழமை இரவு (ஜூலை 26) இறந்ததாக செவ்வாய்க்கிழமை செய்திகள் தெரிவிக்கின்றன.

பிளாக் 18 பெடோக் தெற்கு சாலைக்கு அருகிலுள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று (ஜூலை.26) இரவு 8.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்த இளைஞன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும், பின்னர் அவர் காயங்களால் இறந்ததாகவும் தெரிகிறது.

பெறப்பட்ட ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், ஒரு கூடைப்பந்து வளைய அமைப்பு இடிந்து விழுந்ததாக கிழக்கு கடற்கரை டவுன் கவுன்சில் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அங்குள்எ குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக, கூடைப்பந்து மைதானம் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து உபகரணங்களின் நிலை குறித்து முழுமையான சோதனை நடத்தப்படும் என்று டவுன் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.