தெற்காசிய பயணிகள் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியது போல் காண்பிக்கப்படும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல, CAAS விளக்கம்

சிங்கப்பூர்: சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு பெரிய தெற்காசிய பயணிகள் குழு சாங்கி விமான நிலைய முனையம் 1 க்கு வந்ததாக கூறப்பட்டதை சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(CAAS) மறுத்துள்ளது.

Singapore Incidents முகநூல் பக்கத்தில் மே 5ம் தேதி அன்று 2142 மணிக்கு வெளியிடப்பட்ட வீடியோவில் ஒரு வாட்டர்மார்க் உள்ளது. இது தேதி 5 மே 2021 என்றும், இடம் சாங்கி விமான நிலையம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகிர்வு தவறானது. இந்த வீடியோ 5 மே 2021 அன்று எடுக்கப்படவில்லை என CAAS மறுத்துள்ளது.

சாங்கி விமான நிலைய முனையம் 1 க்கு வரும் பயணிகளையும் அப்போது நேரம் 1453 என்று குறிக்கும் கடிகாரம் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. 5 மே 2021 அதிகாலை தெற்காசியாவிலிருந்து எந்த விமானங்களும் டெர்மினல் 1 க்கு வரவில்லை என CAAS மறுத்துள்ளது

வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கேட் ஹோல்ட் ரூம் டி 42/43 இல் புதுப்பித்தல் பணிக்கா வைக்கப்பட்ட தட்டிகளை கடந்து பயணிகள் நடந்து வருவதை காண முடிந்தது. இந்த தட்டிகள் 5 ஏப்ரல் 2021 ல் அகற்றப்பட்டது. எனவே இது 2021 ஏப்ரல் 5 ம் தேதிக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதிப்படுத்துகிறது.

23 ஏப்ரல் 2359 மணி முதல் இந்தியாவுக்கு சமீபத்திய பயண வரலாற்றை கொண்ட அனைத்து நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் சிங்கப்பூர் வரவோ சிங்கப்பூர் வழியாக செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.

தற்போது Singapore Incidents முகநூல் பக்கத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது. வாட்டர்மார்க் இல்லாம் அதே வீடியோவை மற்றோருவர் பகிர்ந்தி்ருந்தார். அதை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

இதே எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கை பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்திய பயண வரலாற்றை கொண்ட பயணிகளுக்கு மே 1 முதல் 2359 மணி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலிருந்து வரும் தகவல்களை நம்புமாறும், தவறான தகவல்களை கொண்டிருக்கும் வீடியோக்களையும் பிற தகவல்களையும் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை CAAS கேட்டு கொண்டுள்ளது.