S$1500 வெள்ளிகள் பணம் இருந்த walletயை உரிமையாளரிடம் ஒப்படைத்த டாக்ஸி ஒட்டுநர் !!!

சிங்கப்பூர்: Comfort Delgro டாக்ஸி ஒட்டுநர் S$1500 வெள்ளிகள் பணம் இருந்த walletயை தன் நிறுவனத்தின் உதவியுடன் திருப்பி கொடுத்ததாக Comfort Delgro நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் இரவு 11 மணியளவில் தனது ஷிப்டை முடித்த பின், கேப் ஓட்டுநர் டான் குவான் ஹ்வீ எப்போதும் செய்வதை போல் தனது டாக்ஸியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பணப்பையை(Wallet) கண்டார்.

ஒரு பயணி தனது டாக்ஸியில் ஒரு பணப்பையை விட்டு சென்றது இதுவே முதல் முறை என்றாலும், டான் அதில் S$1,500 ரொக்கம் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.

பெரும்பாலான நேரங்களில், பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை விட்டு செல்கிறார்கள். ஆனால் தான் எந்த பொருளை கண்டுபிடித்தாலும், இந்த பொருட்கள் என்னுடையவை அல்ல என்பதால் அவைகளை எப்போதும் திருப்பி கொடுத்து வருகிறேன் என்று அந்த ஒட்டுநர் கூறினார்.

அது யாருடையது என்று அவருக்கு தெரியாததால், ஓட்டுநர் டான் உடனடியாக பணப்பையை தன் நிறுவனத்தின் லாஸ்ட் அண்ட் பவுண்டு(Lost & Found) துறையில் ஒப்படைத்தார். பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் திருப்பித்தர முடிந்தது என்று Comfort Delgro டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Image credit: Comfort Delgro)