S$460,000 வெள்ளிகள் மதிப்புள்ள “ஹெராயின், ஜஸ்” பறிமுதல் செய்யப்பட்டது, மூன்று பேர் கைது !!!

சிங்கப்பூர்: 3 மே அன்று மத்திய போதைப்பொருள் தடுப்பு (CNB) அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கையில், இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களும், ஒரு மலேசிய ஆணும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டதாக CNB கூறியுள்ளது.

சிங்கப்பூரில் பல இடங்களில் நடந்த இந்த நடவடிக்கையின் போது மொத்தம் சுமார் 3,200 கிராம் ஹெராயின் மற்றும் 1,028 கிராம் ‘ஐஸ்’ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக CNB கூறியுள்ளது. கைப்பற்றப்பட்ட மருந்துகள் சுமார் S$460,000 வெள்ளிகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 3 மாலை, CNB அதிகாரிகள் உட்லேண்ட்ஸ் அவென்யூ 8 க்கு அருகில் ஒரு வாகனத்தை தடுத்து, 19 வயது சிங்கப்பூர் ஆடவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் சுமார் 1,720 கிராம் ஹெராயின் மற்றும் 1,028 கிராம் ‘ஐஸ்’ பறிமுதல் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்த நடவடிக்கையில், அதிகாரிகள் வுட்லண்ட்ஸ் தொழில்துறை பூங்கா E 3 க்கு அருகில் 55 வயதான சிங்கப்பூர் ஆடவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் சுமார் 1,262 கிராம் ஹெராயின் மற்றும் S$3,837 வெள்ளிகள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெண்டமீர் சாலைக்கு அருகிலுள்ள அவரது இல்லத்திற்கும் அழைத்து செல்லப்பட்டு, அங்கு சுமார் 218 கிராம் ஹெராயின் மற்றும் S$4,000 வெள்ளிகள் பணம் மீட்கப்பட்டது.

முந்தைய கைதுகளை தொடர்ந்து, அன்று மாலையே, CNB அதிகாரிகளின் மற்றொரு குழு உட்லேண்ட்ஸ் சாலையின் அருகே 32 வயது மலேசிய ஆடவரை கைது செய்தது.

பிடிபட்ட நபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக CNB கூறியுள்ளது.

(Image source: CNB)