வரும் அக்டோபர் 30 முதல், தங்குமிடங்களிலிருந்து வாரத்திற்கு 3000 தொழிலாளர்கள், லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் செராய் செல்ல அனுமதி..!!!

சிங்கப்பூர்: வரும் அக்டோபர் 30 முதல் வாரத்திற்கு 3000 தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரை லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் செராய் ஆகிய இடங்களுக்கு சமூக பார்வையிடலுக்கு அனுமதிப்பதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

13 செப்டம்பர் முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதிகளில் இருந்து 500 தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் சமூகத்தை பார்வையிடும் முன்னோட்ட திட்டத்தின் கீழ் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல முடிந்தது. ஒரு மாத கால முன்னோட்டத்தின் போது, 30 தங்குமிடங்களிலிருந்து சுமார் 700 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லிட்டில் இந்தியாவிற்கு ஆறு மணி நேரம் வரை சென்று வந்தனர்.

தொழிலாளர்கள் சமூகத்திற்கு செல்வதற்கு முன்னும் பின்னும் ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ART) செய்ய வேண்டும், இதில் இதுவரை யாரும் நேர்மறை சோதனை செய்யப்படவில்லை. அமைச்சகத்தால் கருத்து கேட்கப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த பயணத்திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளனர். சிலர் நீண்ட நேரம் பார்வையிடுதல் மற்றும் அதிக இடங்களுக்கு செல்ல விரும்புவதாக கருத்துக்களை வழங்கியுள்ளதாக MOM தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முன்னோட்டத்தில் நேர்மறையான கருத்துக்களை பெற்றுள்ளதால், வரும் 30 அக்டோபர் முதல், வாரத்திற்கு 3000 தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் செராய் ஆகிய இடங்களை பார்வையிட முடியும், பார்வையிடும் நேரமும் எட்டு மணிநேரம் வரை அதிகரிக்கப்படுவதாக MOM அறிவித்துள்ளது.

கோவிட் கிளஸ்டர்கள் இல்லாத தங்குமிட கட்டிடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சமூகங்களை பார்வையிட பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த தங்குமிடங்கள் நல்ல பாதுகாப்பான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் மற்றும் அதிக தடுப்பூசி விகிதங்களை கொண்ட தொழிலாளர்களை கொண்டிருக்க வேண்டும். சமூகத்தை பார்வையிட செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பார்வையிடும் நாளில் ART சோதனை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் 30 அக்டோபர் முதல், தடுப்பூசி போடப்பட்ட அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு மையங்களை (RC) பார்வையிடலாம், மேலும் இனி பார்வையிடும் முன் ART சோதனை தேவைப்படாது.

தடுப்பூசி போடப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களின் RRT மூலம் பெறும் ART எதிர்மறை சோதனை முடிவை அல்லது வருகைக்கு முந்தைய ART சோதனை முடிவை பயன்படுத்தி .வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு மையங்களை (RC) பார்வையிட முடியும் என MOM தெரிவித்துள்ளது.

(Image source: Minister Tan see leng)