சிங்கப்பூரில் துப்புரவு பணி செய்ய(CWO) ஆணை வழங்கப்பட்டவர்கள் முதன் முறையாக நகரப்பகுதியில் துப்புரவு பணி செய்தனர்..!

சிங்கப்பூர்: குப்பைகளை போட்டு தண்டணை பெற்ற குற்றவாளிகளுக்கு உணர்த்தவும் பொது்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதன்முறையாக நகரப் பகுதியில் துப்புரவு பணி ஆணை (CWO) நிகழ்வுகள் நடத்தப்பட்ட்டதாக.தேசிய சுற்றுச்சூழல் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் வியாழன்(நவம்பர்.15&17) ஆகிய இரு தினங்களில் சைனாடவுன் மற்றும் தஞ்சோங் பகார் பகுதிகளில் இதுபோன்ற இரண்டு நகர CWO அமர்வுகள் நடைபெற்றதாக நேற்று (நவம்பர் 18) ஊடக வெளியீட்டில் NEA தெரிவித்துள்ளது.

CWO அமர்வுகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி சிலரை நிற்க வைத்து, நடந்துகொண்டிருக்கும் CWO நிகழ்வை முன்னிலைப்படுத்தவும், பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அது தொடரும் என்று NEA கூறியது.

CWO துப்புரவு பணி நிகழ்வு (source: NEA)

NEA 2017 முதல் 2021 வரை, சராசரியாக 27,200 குப்பை மற்றும் உயரத்தில் இருந்து குப்பைகளை போடும் குறங்களுக்காகவும் வெளியிட்டது அதே காலகட்டத்தில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட CWOக்களின் எண்ணிக்கை சுமார் 10,200 என்று கூறப்பட்டுள்ளது.

குப்பை கொட்டும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். சிகரெட் துண்டுகளை் கீழே் போடுவது இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன என்று நில ஆய்வுகள் காட்டுகின்றன.

NEA-ன் குப்பை கொட்டும் எதிர்ப்பு அமலாக்க விதிப்படி, குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கிறது, முதல் குற்றத்திற்கு $300 அபராதம் விதிக்கப்படும், அதே நேரத்தில் உயரத்தில் இருந்து குப்பை கொட்டுபவர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் CWO செய்ய தண்டனை விதிக்கப்படலாம். 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, CWO,ன் படி குற்றவாளிகள் குறைந்தபட்சம் மூன்று மணிநேரம், அதிகபட்சம் 12 மணிநேரம் வரை பொதுப் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டம் 1987ன் கீழ், குப்பை கொட்டும் குற்றத்திற்கான அதிகபட்ச முதல் நீதிமன்றத் தண்டனையாக $2,000 அபராதம் இரண்டாவது குற்றத்திற்கு $4,000 மற்றும் மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த தண்டனைகளுக்கு $10,000 அபராதம் விதிக்கப்படலாம்.