சிங்கப்பூர்: ஐஎம்எம், புகிஸ் ஜங்கஷன் உள்ளிட்ட 23 இடங்கள் கோவிட் பாதித்தவர்கள் சென்ற இடங்கள் பட்டியலில் சேர்ப்பு: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 29ம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 23 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்கள் அணிந்து தான் எங்கும் செல்ல முடியும் என்ற நிலை இருந்தாலும், சமூக பரவலில் ஒரு சில தொற்றுகள் MOH ஆல் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தொற்று ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் வணிக வளாகங்களுக்கு சென்று வந்தவர்களாக உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட 23 இடங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 26ம் தேதி பகல் 1.30 முதல் 2.40 மணி வரை கோவிட் பாதித்தவர்கள் புகிஸ் ஜங்கஷனில் இருந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 தேதி மாலை 5.10 மணி முதல் மாலை 5.50 மணி வரை கோவிட் பாதித்தவர் ஜூராங் கிழக்கில் உள்ள IMM வணிக வளாகத்தில் இருந்துள்ளார்.

மேலுள்ள இரண்டு இடங்களையும் சேர்த்து செவ்வாயன்று இரவு அறிவிக்கப்பட்ட பட்டியலிலுள்ள 23 இடங்களும் பின்வருமாறு:

23 புதிய இடங்களின் பட்டியல்

கோவிட்-19 பாதித்தவர்கள் சென்ற இடங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டியதில்லை என்றும் அந்த இடங்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன என்றும் MOH ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.