விநியோக உதவியாளராக பணிபுரியும் தங்குமிட தொழிலாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்: நேற்று (பிப்.23) சுகாதார அமைச்சகம்(MOH) வெளியிட்ட கோவிட் தொற்று அறிக்கையில் 1 தங்குமிட தொழிலாளருக்கும், 3 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் தொற்று இருந்ததாக தெரிவித்திருந்தது, அந்த 1 தங்குமிட தொற்று பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

அந்த தங்குமிட தொழிலாளர் 35 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் ஆடவராவார். இவர் சிங் வூட்வொர்க்கிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விநியோக உதவியாளராக பணிபுரிகிறார். மேலும் கிரான்ஜி வேவில் அமைந்துள்ள ஒரு தங்குமிடத்தில் தங்கியுள்ளார். பொருட்களை ஏற்றும் மற்றும் இறக்கும் வேலை செய்யும் அவர், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவதில்லை.

பிப்ரவரி 21 அன்று வழக்கமான ஸ்வாப் சோதனை (RRT) ன் ஒரு பகுதியாக அவருக்கு எடுக்கப்பட்ட கோவிட் -19 சோதனை முடிவு நேர்மறையாக வந்தது.

பிப்ரவரி 22 அன்று ஒரு தனிப்பட்ட ஸ்வாப் சோதனை செய்யப்பட்டது, அதே நாளில் அவர் தொண்டை புண் மற்றும் இருமலை ஆகியவற்றை கொண்டிருந்தார்.

அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மேலும் ஆம்புலன்சில் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு பிப்ரவரி 22 ம் தேதி அனுப்பப்பட்டார்.

அவரது கடைசியாக பிப்ரவரி 7 அன்று எடுக்கப்பட்ட வழக்கமான ஸ்வாப் சோதனை (RRT) முடிவு கோவிட்-19 தொற்று இல்லை என வந்திருந்தது. அவரது செரோலாஜிக்கல் சோதனை முடிவு எதிர்மறையாக திரும்பி வந்துள்ளது, இதனால் இது புதிய தொற்றாக இருக்கலாம் என்பதை குறிக்கிறது என்று MOH கூறியுள்ளது.

அவரது தங்குமிடம் மற்றும் வேலையிட தொடர்புகள் உட்பட வழக்கின் அடையாளம் காணப்பட்ட அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் கோவிட் சோதனை செய்யப்படும். இந்த நபர் அவர்களால் பாதிக்கப்பட்டாரா என்பதை தீர்மானிக்க நெருங்கிய தொடர்புகளுக்கு செரோலாஜிக்கல் சோதனைகளும் நடத்தப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

(Chng woodsworks – Image source: Google map )