சிங்கப்பூர்: அங் மோ கியோ ஹப், செம்பவாங்கில் உள்ள சன் ப்ளாசா உள்ளிட்ட இடங்கள் கோவிட் பாதித்தவர்கள் சென்ற இடங்கள் பட்டியலில் சேர்ப்பு: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 30 தேதி, புதன் கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 7 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்கள் அணிந்து தான் எங்கும் செல்ல முடியும் என்ற நிலை இருந்தாலும், சமூக பரவலில் ஒரு சில தொற்றுகள் MOH ஆல் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தொற்று ஏற்பட்டவர்கள் பெரும்பாலும் வணிக வளாகங்களுக்கு சென்று வந்தவர்களாக உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட 7 இடங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி பகல் 1 மணி முதல் 2.45 மணி வரையிலும் செப்டம்பர் 28ம் தேதி பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரையிலும் கோவிட் பாதித்தவர்கள் செம்பவாங்க், சன் ப்ளாசாவிலுள்ள ஸ்டார்பக்ஸில் இருந்துள்ளார்கள்.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி மாலை 4.40 மணி முதல் 5.20 மணி வரையில் அங் மோ கியோ ஹப்பில் உள்ள ப்ராட்டா்ராயாவிலும் அன்றைய தினம் பகல் 3.40 மணி முதல் மாலை 4.25 மணி வரை அங் மோ கியோ ஹப்பில் உள்ள டைம் ஷோனிலும் கோவிட் பாதித்தவர்கள் இருந்துள்ளார்கள்.

மேலுள்ள இரண்டு இடங்களையும் சேர்த்து புதன் இரவு அறிவிக்கப்பட்ட பட்டியலிலுள்ள 7 இடங்களும் பின்வருமாறு: (சன் ப்ளாசாவுக்கு இரு முறை வெவ்வேறு நேரங்களில் கோவிட் பாதித்தவர் சென்றுள்ளார்கள்)

கோவிட்-19 பாதித்தவர்கள் சென்ற இடங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டியதில்லை என்றும் அந்த இடங்கள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன என்றும் MOH ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.