யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது..!!
சிங்கப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான, யுனிவர்சல் ஸ்டூடியோவில் நடந்த இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடுமையான காயங்கள் எதுவும் இல்லை, மேலும் அதிகாரிகள் இப்போது விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. விசாரணை நடந்து வருவதால் ஒப்பந்ததாரரை மேற்கொண்டு பணிகளை தொடர விடாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 3 ம் தேதி மதியம் யுனிவர்சல் ஸ்டூடியோவில் கட்டிடத்தை இடிக்கும் பணிக்காக கட்டுமான நிறுவனம் பயன்படுத்திய கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதை ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.
கிரேன் ஆபரேட்டருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது, அவரே கேபினில் இருந்து வெளியே வந்தார். அவரது காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
China Jingye இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட், அனைத்து பளு தூக்கும் நடவடிக்கைகள் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் இப்போது கிரேனை பாதுகாப்பாக மீட்டெடுப்பதில் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
(Image credit: Jonas De Thuang -FB)