சிங்கப்பூரில் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, அத்தியாவசியமான வணிக மற்றும் அலுவல் ரீதியான பயணங்களுக்கு அனுமதி !!!

சிங்கப்பூரில் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை, அத்தியாவசிய வணிக மற்றும் அலுவல் ரீதியான பயணங்களுக்கு ஏப்ரல் 23 முதல் அனுமதிப்பதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்று நோய் இருந்தாலும், அத்தியாவசிய வணிகம் மற்றும் அலுவல்ரீதியான பயணங்கள் இன்னும் தொடர வேண்டும். டிஜிட்டல் மீடியாவில் பல சந்திப்புகள் நடத்தப்பட்டாலும், சில முக்கியமான விவாதங்கள் நேருக்கு நேர் செய்யப்பட வேண்டும்.

சிங்கப்பூரின் தேசிய நலன்களுக்கு உத்தியோகபூர்வவமான தொடர்புகள் மிக முக்கியமானவை. முழு தடுப்பூசி போட்ட நபர்கள் அதிக ஆபத்து உள்ள நாடுகளுக்கு அத்தியாவசியமான அலுவல்ரீதியாக பயணங்களுக்கு, 22 ஏப்ரல், 2359 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். கடுமையான சோதனை மற்றும் சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பயணத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும், மேலும் திரும்பி வந்த பிறகும் அவர்கள் திரும்பி வந்த 3ம் நாள் 7 நாள் மற்றும் 14 ஆம் நாள், கோவிட்-19 பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கூடுதல் முன்னெச்சரிக்கையாக, இந்த பயணிகள் சிங்கப்பூர் திரும்பி வந்தவுடன் வீட்டில் அல்லது ஒரு விடுதியில் 7 நாள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பிசிஆர் சோதனை தளத்திற்கு அல்லது தொலைதூரத்தில் இருந்து செய்ய முடியாத அத்தியாவசிய வேலைகளுக்காக வேலையிடத்திற்கு செல்ல அவர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேறலாம்.

முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் திரும்பியதும் தொடர்ந்து வழக்கமான எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என MOH கூறியுள்ளது.

(Image credit: Yahoo)