சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக கடைபிடிக்கப்படும் earth hour, சிங்கப்பூரில் இன்றிரவு கடைபிடிக்கப்படுகிறது

சிங்கப்பூரில் மார்ச் 27 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு காலநிலை மாற்றத்திற்காகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும் எர்த் ஹவர் கடைபிடிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வைப்பது இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும், எர்த் ஹவர் அமைப்பான WAF, உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களை குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு தங்கள் விளக்குகளை அணைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கிறது.

சிங்கப்பூரை சுற்றியுள்ள 740 க்கும் மேற்பட்ட இடங்கள், விளக்குகளை 1 மணி நேரம் அணைக்கும் முயற்சியில் பங்கேற்க உறுதியளித்துள்ளன.

நம் கிரகத்தை(பூமி) பாதுகாப்பதற்கான நம்முடைய உறுதிப்பாட்டின் சைகையாக நீங்களும் இந்த எர்த் ஹவரின் போது ஒரு மணி நேரம் உங்கள் வ விளக்குகளை அணைக்கலாம்.

இந்த ஆண்டு எர்த் ஹவருக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) முயற்சிகளின் ஒரு பகுதியாக, தனது சமீபத்திய டிஜிட்டல் பிரச்சாரமான சிங்கப்பூர் கோசோங் திட்டத்தில் தனி நபர்களையும் வணிக அமைப்புகளையும் ஒன்றிணைத்து நிகர பூஜ்ஜிய உமிழ்வை 2050 க்குள் அடைய வலியுறுத்துகிறது.

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 இன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வாசிகள் இருக்க முடியும், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலமும், சிங்கப்பூரின் பசுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவலாம். மேலும் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கும் பலவற்றை செய்யலாம் என துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முயற்சிகள் அதிகம் பயனிப்பதாக தெரியாது. ஆனால் எதிர்கால தலைமுறை சிங்கப்பூரர் வாசிகளுக்கு ஒரு தூய்மையான மற்றும் அழகான வீட்டை கட்டுவதில் நாம் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.