சிங்கப்பூர்: அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கான மின்சார கட்டணம் ஒரு KWHக்கு 1.83 காசுகள் உயர்வு: SP Group

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு, மின்சார கட்டணம் (7% ஜிஎஸ்டிக்கு முன்) முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது ஒரு கிலோவாட்டுக்கு சராசரியாக 1.83 காசுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக எஸ்பி குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் திருத்தப்பட்ட கட்டணமும் முந்தைய காலாண்டின் கட்டணமும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைவான கட்டணம் என எஸ்பி குரூப் கூறியுள்ளது.

எரிசக்தி செலவினங்கள் அதிகமானதால் கட்டணங்களை உயர்த்துவதாக கூறப்பட்டுள்ளது. எரிசக்தி செலவுகள் மின்சார கட்டணத்தின் முக்கிய அங்கமாக உள்ளது என்றும் அவை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றவை எஸ்பி குழுவின் நெட்வொர்க் செலவுகள் மற்றும் சந்தை ஆதரவு சேவை கட்டணங்கள் மற்றும் எரிசக்தி சந்தை நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பவர் சிஸ்டத்தின் இயக்க கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய
கட்டணங்கள்

வீடுகளுக்கு, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை மின்சார கட்டணம் (7% ஜிஎஸ்டிக்கு முன்) கிலோவாட் ஒன்றுக்கு 19.60 முதல் 21.43 காசுகள் வரை அதிகரிக்கும்.

நான்கு அறைகள் கொண்ட ஹெச்டிபி பிளாட்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின் கட்டணம் S$7.01 (7% ஜிஎஸ்டிக்கு முன்) அதிகரிக்கும்.

மின்சார துறை கட்டுப்பாட்டாளரான எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) நிர்ணயித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டுக்கும் மின்சார கட்டணங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என SP group நிறவனம் குறிப்பிட்டுள்ளது.

(Image source: Youtube)