01 ஏப்ரல் முதல் 30 ஜூன் வரையான காலத்திற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது !!!

சிங்கப்பூரில் மின்சார கட்டணம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஒரு கிலோவாட் மணிக்கு (KWH) சராசரியாக 1.77 காசுகள், அதிகரிக்கும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் அதிக எரிபொருள் விலைகள் காரணமாகும்.

வீடுகளுக்கான, மின்சார கட்டணம் ஒரு கிலோவாட் ஒன்றுக்கு 22.55 காசுகளிலிருந்து 20.76 ஆக (ஜிஎஸ்டி தவிர்த்து) அல்லது 8.6 சதவீதமாக அதிகரிக்கும்.

HDB நான்கு அறைகள் கொண்ட வீடுகளிவ வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின்சார கட்டணம் S$5.62 அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

எஸ்பி குழுமம் ஒவ்வொரு காலாண்டும், மின்சாரத் தொழில்துறை கட்டுப்பாட்டாளராற எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) நிர்ணயித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் மின்சார கட்டணங்களை மதிப்பாய்வு செய்கிறது. இந்த புதிய மின் கட்டணங்களுக்கு EMA ஒப்புதல் அளித்துள்ளது

(Image source: Wikipedia)