சிங்கப்பூர்: 8 உணவு & குளிர்பானங்கள் கடையை மூட உத்தரவு: MSE

எட்டு உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 14 விற்பனை நிலையங்கள் மற்றும் 32 தனி நபர்களுக்கு பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் MSE அமைச்சகம் செவ்வாயன்று (செப்.29) ஊடக வெளியீடு ஒன்றில் கூறியுள்ளது.

8 F&B விற்பனை நிலையங்களில் உள்ள குற்றங்களின் விவரங்கள் மற்றும் மூடப்படுவதற்கான உத்தரவுகள் கீழே உள்ளன

  • செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு, ரிவர்சைடு பாயிண்டில் உள்ள , ப்ரூவர்ஸ் கடையில் எட்டு நபர்கள் அடங்கிய குழுவாக இரண்டு மேஜைகளில் சேர்ந்து அமர்ந்திருந்ததை, அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த கடையை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 4 வரை 10 நாட்களுக்கு மூட வேண்டும் என்று நகர்ப்புற மறு அபிவிருத்தி ஆணையம் (URA) உத்தரவிட்டது.
  • செப்டம்பர் 16 அன்று, அதிகாரிகள் இரவு 10.45 மணிக்கு, புங்கோல் செட்டில்மென்ட்டில் உள்ள சியாம் ஸ்கொயர் மூகாட்டா கடையில் இரண்டு மேஜைகளில் சிலர் மது அருந்துவதை கவனித்தனர். சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) அந்த கடையை செப்டம்பர் 19 முதல் 28 வரை 10 நாட்களுக்கு மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • செப்டம்பர் 16 அன்று, 59 நியூ அப்பர் சாங்கி சாலையில் வெளிப்புற புத்துணர்ச்சி பகுதியில் இரவு 10.50 மணிக்கு நான்கு மேஜைகளில் சிலர் மது அருந்தியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அருகே இருந்த காபி கடையில் இருந்து மது பானங்கள் விற்கப்பட்டன. அந்த காபி கடையை செப்டம்பர் 19 முதல் 28 வரை 10 நாட்கள் மூட வேண்டும் என்று SFA உத்தரவு பிறப்பித்தது.
  • செப்டம்பர் 16 அன்று, 60/62/64 டான்ஜோங் பகர் சாலையில் அமைந்துள்ள ககாங் டோங்கில், இரவு 9.05 மணிக்கு இரண்டு மேஜைகளில் 12 புரவலர்கள் அமர அனுமதித்ததாக கண்டறியப்பட்டது, ஒவ்வொரு மேஜையிலும் 6 பேர் அமர்ந்திருந்ததோடு ஒருவருக்கொருவர் உணவை பகிர்ந்துகொள்வதை கவனித்தனர். அந்த கடையை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 4 வரை 10 நாட்களுக்கு மூட வேண்டும் என்று URA ஒரு உத்தரவை பிறப்பித்தது.
  • செப்டம்பர் 18 அன்று இரவு 9.15 மணிக்கு, 48/50 டான்ஜோங் பகர் சாலையில் அமைந்துள்ள சிக்கன் அப், 10 நபர்களை இரண்டு மேஜைகளில் அமர அனுமதித்ததை ஒப்பு கொண்டது. அதனால் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை 10 நாட்களுக்கு கடையை மூட வேண்டும் என்று URA உத்தரவு பிறப்பித்தது.
  • செப்டம்பர் 19 அன்று,, BLK26 ஜலான் மெம்பினாவில் உள்ள ஜெ.மெம்பினாவின் வெளிப்புற புத்துணர்ச்சி பகுதியில் இரவு 11.20 மணிக்கு ஒரு நபர் மது அருந்துவதை அதிகாரிகள் கவனித்தனர். மதுவை விற்ற குளிர்பான கடையை செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை 10 நாட்கள் வரை மூடுமாறு SFA ஒரு உத்தரவை பிறப்பித்தது.
  • செப்டம்பர் 25 அன்று, ஆர்ச்சர்ட் டவர்ஸில் உள்ள ஜம்போரி பார் & கபேயில் வெவ்வேறு மேஜைகளில் பல்வேறு குழுவாக தனிநபர்கள் ஒன்றிணைவதை அதிகாரிகள் கவனித்தனர். சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஜம்போரி பார் & கபேயை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது
  • செப்டம்பர் 25 அன்று, கபே டி மியூஸ்ஸில் 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளி விடாமல் நுழைவாயிலில் தனிநபர்கள் வரிசையில் நிற்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மக்களுக்கான வெப்பநிலை பரிசோதனையும் நடைபெறவில்லை, மக்கள் அமரும் இருக்கைகள் 1 மீட்டருக்கும் குறைவான இடைவெளியுடன் இருப்பதையும் அதிகாரிகள் கவனித்தனர். செப்டம்பர் 26 முதல் 2020 அக்டோபர் 5 வரை காஃபி டி மியூஸை மூட வேண்டும் என்று STB ஒரு உத்தரவை பிறப்பித்தது.

பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக மேலும் 14 F&B விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, நடவடிக்கைகளை மீறியதற்காக 13 விற்பனை நிலையங்களுக்கு $ 1,000 அபராதமும், மீண்டும் மீண்டும் செய்த குற்றங்களுக்காக ஒரு விற்பனை நிலையத்திற்கு $ 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் 240 F&B விற்பனை நிலையங்களில் செப்டம்பர் 25 முதல் 26 வரை, அறியப்பட்ட முக்கிய இடங்களில் அரசு நிறுவனங்கள் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டன. இவற்றின் மீதான நடவடிக்கைகள் பற்றி பிறகு அறிவிக்கப்படும்.

இதை தவிர F&B விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத 32 தனி நபர்களுக்கு தலா S$300 வெள்ளிகள் அபராதம் விதிக்கப்படும் என MSE அமைச்சகம் தனது ஊடக வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது.