ஏப்ரல் 12 முதல் AYE மற்றும் CTEல் நெடுஞ்சாலைகளில் சாலை கட்டணங்கள் (ERP) உயர்தப்படுகின்றன – LTA

பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளில் சில தளர்த்தப்பட்ட பிறகு, காலை உச்ச நேரத்தில் AYE மற்றும் CTEல் போக்குவரத்து அளவு குறிப்பிட்ட அளவு வரை அதிகரித்துள்ளதாக LTA கூறியுள்ளது.

காலை உச்ச நேரத்தில் பயண முறைகளில் சில மாற்றங்களையும் கவனித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் மிக அதிகமான போக்குவரத்துக்கு பதிலாக, இப்போது காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை நீண்ட கால இடைவெளியில் அதிக போக்குவரத்தை காணப்படுவதாக LTA கூறியுள்ளது.

Revised ERP charges – LTA

AYE மற்றும் CTE ல் அதிக நேர நெரிசலை நிர்வகிக்கவும், போக்குவரத்து அளவை மேலும் பரப்பவும், ஈஆர்பி விகிதங்கள் திங்கள், ஏப்ரல் 12 முதல் இந்த நெடுஞ்சாலைகளுக்கு S$1 வெள்ளி அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 11 இடங்களில் இந்த புதிய ERP கட்டண மாற்றங்கள் இருக்கும். S$0 வாக இருந்த ERP கட்டணம்S$1 ஆகவும் S$1 ஆக இருந்த ERP கட்டணம் S$2 ஆகவும் மாற்றப்படுகிறது.

போக்குவரத்து வேகத்தையும் நெரிசல் அளவும் உன்னிப்பாக கண்காணிப்படும் என்றும், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளில் தொடர்ந்து மாற்றங்கள் வருவதால் ERP விகிதங்களை மேலும் சரி செய்ய வேண்டியிருந்தால், மதிப்பீடு செய்யப்படும் என்று LTA தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)