காலாங்க் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் ஒருவர் மரணம், கிழக்கு-மேற்கு லைன் ரயில் சேவை பாதித்தது !!!

பிப்ரவரி 25 அன்று, கிழக்கு-மேற்கு லைனில் காலாங் ரயில் நிலையம் அருகே இரவு 9 மணியளவில், பாசிர் ரிஸ் நோக்கி ரயில் சென்ற போது ஒரு நபர் காலமானார் என்று் SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் ரயில் பாதைக்கு எப்படி சென்றார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

ரயில் கேப்டன் காலாங் ரயில் நிலையம் அருகே ஒரு பொருளை தாக்கியதாக தகவல் தந்தார். உடனடியாக நிலைய மேலாளர் ரயில் பாதைக்கு அனுப்பப்பட்டார், காலாங் ரயில் நிலையத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் ஒரு அசைவற்ற மனிதரை கண்டார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சிவல் பாதுகாப்பு படை (SCDF) மற்றும் காவல்துறை உடனடியாக வரவழைக்கப்பட்டன. அதன் பிறகு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த நபரின் குடும்பத்திற்கு SMRT பராமரிப்பு குழு தேவையான உதவியை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் புகிஸ் மற்றும் அல்ஜுனிட் ரயில் நிலையங்களுக்கு இடையே இரு திசைகளிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்று பயண விருப்பங்களை தேட பயணிகளுக்கு அறிவுறுத்துவதற்காக ரயில் மற்றும் நிலைய அறிவிப்புகள் செய்யப்பட்டன.

இலவச வழக்கமான மற்றும் பிரிட்ஜிங் பஸ் சேவைகள் செயல்படுத்தப்பட்டு சேவையின் இறுதி வரை இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணைகளுக்கு உதவி வருவதாக SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Image credit: Street directory)