சிங்கப்பூர் முழுவதும் காலை முதல் மாலை வரை கொட்டி தீர்த்த மழை !!! ⛈⛈⛈⛈

இன்று (ஏப்ரல் 17, 2021) காலை 11 மணி முதல் சிங்கப்பூரின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் பலத்த இடியுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது.

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையில் உருவான ‘சூரிகே’ புயலால் வலுவடைந்ததையொட்டி இந்த அளவு மழை பெய்ததாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) கூறியுள்ளது.

சிங்கப்பூரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. பாசிர் பஞ்சாங், போனவிஸ்டா, துவாஸ் மற்றும் புக்கிட் திமா உள்ளிட்ட பல நிலையங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

மழை படிப்படியாக லேசான மழையாக மாறி மாலை தேரத்தில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்பதாக NEA கூறியுள்ளது.

ஏப்ரல் 17, மாலை 6 மணி நிலவரப்படி, உலு பாண்டனில் தினசரி அதிகபட்ச மழைப்பொழிவு 170.6 மி.மீ ஆகவும், மிக குறைந்த வெப்பநிலை நியூட்டனில் 21.6⁰C ஆகவும் பதிவாகியுள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் முழுவதும் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஏப்ரல் தினசரி மழை இதுவாகும். இது 25 ஏப்ரல் 2007 அன்று கம்போங் பஹ்ருவில் பதிவான 159.9 மி.மீட்டரை விட அதிகமாகும்.

அடுத்த சில நாட்களுக்கு, விடியற்காலையிலிருந்து காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) கூறியுள்ளது.