துவாஸ் அவென்யு 20 ல் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயம், ஒருவர் மரணம் !!!

சிங்கப்பூர்: இன்று (செப்டம்பர்.23) பிற்பகல் 3.15 மணிக்கு, 20, துவாஸ் அவென்யு 20 ல் ஏற்பட்ட தீ் விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும், ஒருவர் மரணமடைந்ததாகவும் SCDF தெரிவித்துள்ளது.

SCDF வந்த போது, முதல் தளத்தில் ஒரு மின் விசை உள்ள அறை புகை மூட்டமாக இருந்தது. SCDF தீயணைப்பு வீரர்கள் மூச்சுத்திணறல் கருவிகள் அணிந்து தீயை கண்டுபிடிக்க வளாகத்திற்குள் கவனமாக நுழைந்தனர்.

மின் விசை உள்ள அறையில் புகைபோக்கி விசிறி விசையில் தீ எரிந்து கொண்டிருந்தது. SCDF இரண்டு உலர் பொடி தீ அணைக்கும் கருவிகள் மூலம் தீயை அணைத்தது.

SCDF குழு, தீக்காயங்கள் ஏற்பட்ட இரண்டு நபர்களை, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பியது. SCDF துணை மருத்துவர், ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவித்தது.

சம்பந்தப்பட்ட வளாகத்தில் இருந்து சுமார் 80 பேர் வெளியேற்றப்பட்டனர். SCDF தீக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.

புகை உள்ளிழுத்தல் அல்லது கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், ஆனால் நிலையாக உள்ளவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பதிலாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சிறப்பு Burn மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என SCDF தெரிவித்துள்ளது.

(Image credit: SCDF)