பெடோக் வடக்கு தெரு 3ல் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து, இரண்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!!!

சிங்கப்பூர்: இன்று (ஏப்ரல் 24) காலை 10.25 மணியளவில், ப்ளோக் 557, பெடோக் வடக்கு தெரு 3ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை தகவல்கிடைக்க பெற்றதாக கூறியுள்ளது.

அந்த ப்ளோக்கின் 7 வது மாடி வீடு ஒன்றில் ஒரு படுக்கையறை மற்றும் வீட்டுக்கு வெளியே உள்ள நடைபாதையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

சாங்கி தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களை கொண்டு தீயை அணைத்தனர்.

படுக்கை அறையில் பொருள்கள் எரிந்த நிலையில்

பாதிக்கப்பட்ட வீட்டின் சமையலறைக்கு வெளியே ஐன்னல் விளிம்பில் சிக்கி கொண்ட இரண்டு பேரை குழுவினர் மீட்டனர். சமையலறை ஜன்னல் வழியாக அவர்கள் விரைவாக பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர்.

அந்த இருவரும் புகையை உள்ளிழுத்திருந்த காரணத்தால் அவர்களை SCDF, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட ப்ளாக்கிலிருந்து சுமார் 45 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஒரு பவர்-அசிஸ்டட் சைக்கிளுக்கு (PAB) மின்சாரம் சார்ஜ் ஆகி கொண்டிருந்தது, காரணமாக இருக்கலாம் என தெரிகிறது