உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் தீ விபத்து, காயமடைந்த SCDFயை சேர்ந்த தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்…!

சிங்கப்பூர்:. 66 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் நேற்று(செப்.16) கிடங்கு ஓன்று தீப்பிடித்ததாக SCDF தெரிவித்துள்ளது.

கிடங்கில் இருந்த கழிவுப் பொருட்கள் தீ விபத்துக்குள்ளானது மற்றும் SCDF தீயணைப்பு வீரர்களால் இரண்டு நுரை ஜெட், இரண்டு நீர் ஜெட் மற்றும் ஒரு UFM ஆகியவற்றைப் பயன்படுத்தி 3 மணி நேரத்திற்குள் அணைக்கப்பட்டது.

இந்த தீயை அணைக்கும் பணிக்காக மொத்தம் 10 அவசரகால வாகனங்கள் மற்றும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

SCDF சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே, சுமார் 25 தொழிலாளர்கள் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, காவல்துறை மற்றும் SCDF அருகே உள்ள வளாகத்தில் இருந்து சுமார் 90 பேரை வெளியேற்றினர்.

தீயை அணைக்கும் பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக SCDF மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காயம் அடைந்த தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக பின்னர் SCDF தனது முகநூலில் தெரிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

(Image credit: SCDF)