Whampoaவில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து, 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்: இன்று (பிப்ரவரி. 28) காலை 9.10 மணியளவில், ப்ளாக் 22 ஜலான் டென்டெராமில் (Whampoa) தீ விபத்து ஏற்பட்டதாகவும் விரைந்து சென்று தீயை அணைத்ததாகவும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

தீ பொங்கி எழுந்து இரண்டாவது மாடியில் ஒரு வீட்டை மூழ்கடித்தது. SCDF சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து 6 குடியிருப்பாளர்கள் தானாகவே வெளியேற்றப்பட்டனர்.

6 பேரில், இருவர் தரை தளத்தில் காயங்களுடன் காணப்பட்டனர். SCDFன் அவசர மருத்துவ சேவைகளை சேர்ந்த ஒரு துணை மருத்துவரும் குழுவினரும் உடனடியாக அந்த இருவரையும் கவனித்தனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடம்

அதேசமயம், மத்திய தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு நீர் ஜெட் மற்றும் இரண்டு சுருக்கப்பட்ட காற்று பேக்பேக்ஸ் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

SCDF, 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 10 பேரை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது. தீ விபத்தின் விளைவாக அவர்கள் காயங்கள் மற்றும் புகையை உள்ளிழுத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட ப்ளாக்கிலிருந்து சுமார் 100 பேர் SCDF மற்றும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வீட்டிற்கு மேலேயும் அதற்கு ஒரு சில பக்கத்து வீடுகளுக்கும் வெப்பம் மற்றும் புகை சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தீக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில் அது வீட்டின் முக்கிய அறையிலிருந்து மின்சார கசிவினால் இருக்கலாம் என SCDF கூறியுள்ளது.