தன்னுடைய 10 மாத குழந்தையை பார்க்காமலேயே துவாஸ் தீ விபத்தில் மரணமடைந்த தொழிலாளர் மாரிமுத்து

சிங்கப்பூர்: துவாஸ் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி மரணமடைந்த மாரிமுத்து என்ற தொழிலாளர் தன்னுடைய 10 மாத மகளை சந்தித்ததே இல்லை என தெரிய வந்துள்ளது.

கடந்த 24 பிப்ரவரி, புதன்கிழமை காலை துவாஸ் தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 10 தொழிலாளர்கள் தீக்காயங்களுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த தீ விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மூன்று பேர் காலாமானார்கள். அதில் 38 வயதான மரிமுத்துவும் ஒருவர்.

பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களை போலவே மரிமுத்தும் தனது சொந்த ஊரை விட்டு சிங்கப்பூரில் வேலைக்கு சென்று தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

28 வயதான அவரது மனைவி ராஜபிரியா, இப்போது தனியாக மாரிமுத்துவின் வயதான தாய் மற்றும் தனது இரண்டு மகள்களுக்கு ஆதரவளிக்கும் சுமையை சுமக்க வேண்டும்.

அவர்களுக்கு 5 வயது ரியா ஸ்ரீ என்ற மகளும் 10 மாதங்களுக்கு முன் பிறந்த லித்திசா என்ற குழந்தையும் உள்ளனர். மாரிமுத்து தனது இளைய மகள் பிறந்த பிறகு நேரில் பார்த்ததில்லையாம்.

itsrainingraincoat என்ற தொண்டு நிறுவனம் give.asia மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்காக நிதி திரட்டி வருகிறது. இப்போதைக்கு மாரிமுத்து குடும்பத்தின் தொடர்பு கிடைத்துள்ளது. மற்ற தொழிலாளர்களுடைய குடும்ப தொடர்புகள் கிடைத்தால் திரட்டப்படும் நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

(Image source IRR/ give.asia)