போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த தொழிலாளருக்கு சிறை தண்டனை …!!

சிங்கப்பூர்: ஜூலை 28 அன்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் மாமுன் ஏஎல் என்ற தொழிலாருக்கு 45 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

அவர் ஒரு போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக கூறி ஒரு போலி சான்றிதழை பெற்றார். உண்மையில் அவர் அத்தகைய பயிற்சிக்கு பெறவில்லை என மனித வள அமைச்சகம்(MOM) தெரிவித்துள்ளது.

மேலும் பணியில் இருந்தபோது, அதிவேகமாக ஒரு போர்க்லிப்டை பொறுப்பற்ற முறையில் ஓட்டி, லாரி டிரைவர் மீது மோதினார். பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன, அதில் பல எலும்பு முறிவுகள் இருந்தன என MOM கூறியுள்ளது.

இது போன்ற விபத்துக்கள் முறையான பயிற்சியால் தடுக்கப்படுகின்றன. போர்க்லிப்ட் ஒட்டுநர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அவர்களை சுற்றியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும் முறையான சான்றிதழை பெறுவதும் அவசியம்.

கடுமையான காயங்கள் அல்லது இறப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, தங்கள் தொழிலாளர்கள், சரியான திறன்களை பெறுவதையும், சரியான பயிற்சியை பெறுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதலாளிகளையும் MOM கேட்டு கொண்டுள்ளது.

(Image credit: Yahoo)