ஏற்கனவே கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த தொழிலாளர்களுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாது !!!

சிங்கப்பூர்: தொற்று ஏற்பட்டு குணமடைந்த தங்குமிடங்களில் உள்ள தொழிலாளர்கள் அல்லது கட்டுமானம், மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து 270 நாட்களை கடந்தவர்கள் மீண்டும் கோவிட் சோதனைக்கு உட்டுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த பலருக்கு தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் காலம் நெருங்கிவிட்டதால், எதிர்ப்பு சக்தியின் அளவுகள் படிப்படியாக குறைவதாக அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

MOH மற்றும் MOM, தொற்று நோய் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தரவுகளை மறு ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குணமடைந்த நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும், எனவே அவரகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் 29 முதல், சிங்கப்பூரில் வசிக்கும் கட்டுமானம், மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் குணமடைந்த தங்குமிட தொழிலாளர்கள், மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து 270 நாட்களை கடந்தவர்கள், நடைமுறையில் உள்ள பொது சுகாதார நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டால், மீண்டும் தொற்று பரவுவதற்கான அபாயத்தை தடுக்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். செரோலஜி சோதனை முடிவு பாஸிடிவ் வந்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் 14 நாள் வழக்கமான சோதனைக்கு செல்ல வேண்டும்.

கடந்த காலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து 270 நாட்கள் கடந்துவிட்டால், அவர்கள் வழக்கமான சோதனைக்கு (RRT) மீண்டும் செல்ல வேண்டும்.

குணமடைந்த கோவிட்-19 வழக்குகளை மீண்டும் தொற்று நோயாக கண்காணிப்படும். மேலும் குணமடைந்த பயணிகளுக்கான எல்லை நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மறு நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் கோவிட்-19 பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சகம்( MOH) தெரிவித்துள்ளது.

(Image source: Gov.sg)