ஏப்ரல் 23 முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு புதிய தங்கும் ஆணை விதிகள் !!!

இந்தியாவில் மோசமான கோவிட் பாதிப்புகள் மற்றும் புதிய வைரஸ் மாறுபாடுகள் தோன்றுவதால், சிங்கப்பூரர்கள் / நிரந்தர வாசிகள் அல்லாதவர்களுக்கு, நுழைவு ஒப்புதல்கள் உடனடியாக குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சமீபத்திய பயண வரலாற்றை கொண்ட பயணிகளுக்கான எல்லை நடவடிக்கைகளை கடுமையாக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கையாக, ஏப்ரல் 22, 2021 முதல் 2359 மணி முதல், சிங்கப்பூருக்குள் வரும் இந்தியாவுக்கு சமீபத்திய பயண வரலாற்றை கொண்ட அனைத்து பயணிகளும் 14 நாட்கள் பிரத்யேக வசதியில் தங்குவதோடு தங்களின் வசிப்பிடத்தில் கூடுதலாக 7 நாட்கள் SHNக்கு உட்படுத்தப்படுவார்கள்

SHN ன் இறுதியில் தற்போதைய விதிகள்படி அவர்கள் சோதிக்கப்படுவார்கள், மேலும் 7 நாள் SHN காலத்தை முடித்த பிறகு மீண்டும் சோதிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 22, 2021, 2359 மணி நேரத்திற்குள் 14 நாள் SHNயை இன்னும் முடிக்காத பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் SHN காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

கட்டுமான, மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணியாற்ற இந்தியாவில் இருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து 21 நாள் SHNல் இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்குள் வரபவர்களால் தொற்று பரவும் அபாயங்களை குறைக்கவும் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும் உதவும் என்று MOH தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)