சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்ட பேருந்துகளின் சோதனை ஓட்டம் தொடங்கியது !!!

சிங்கப்பூர்: Go-Ahead நிறுவனம் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்ட இரண்டு பேருந்துகளை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமல்லாமல், பேருந்துகளிலும் இனி சோலார் பேனல்களை பார்க்கலாம். பாசிர் ரிஸ், டேம்பைனீஸ் மற்றும் மரைன் பரேட் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புதிய சோலார் பேனல் பொருத்தப்பட்ட பேருந்து சேவை 15 யை காணலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கான முயற்சியாக Go-Ahead சிங்கப்பூர் இரண்டு பேருந்துகளில் சோதனையை நடத்துகிறது.

பேருந்துகளின் பேட்டரியை சார்ஜ் செய்ய சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலமும், மின்மாற்றியில் இருந்து ஒரு சுமையை எடுத்துக்கொள்வதன் மூலமும் இது செய்யப்படுகிறது.

பேருந்துகளில் பொறுத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள்

அந்நிறுவனம் இங்கிலாந்தில் இதை செய்தபோது 3-4% எரிபொருள் சேமிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சேமிப்பு சிறிதாக இருந்தாலும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேருந்துக்கு சுமார் 1,400 லிட்டர் டீசல் சேமிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் வெயில் காலநிலைக்கு, இன்னும் அதிகமான எரிபொருள் சேமிப்புகளை காண முடியும் என்று அமைச்சர் ஆங் யீ கங் கூறியுள்ளார்.

(Images credit: Minister Ong Yee Kung)