NSC நெடுஞ்சாலை பணிகளுக்காக தாம்சன் சாலையில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது !!!

சிங்கப்பூர்: NSC நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பணிகளுக்காக தாம்சன் சாலையில் ஒரு நிலத்தை (கட்டிடம்) அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாக SLA, LTA மற்றும் BCA ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

2027 ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் 21.5 கிலோமீட்டர் நீளமுள்ள NSC சாலை வடக்கு பகுதியை நேரடியாக நகர மையத்துடன் இணைக்கும்.

இது வடக்கு பகுதியில் புதிய முன்னேற்றங்களை கொடுக்கும் மற்றும் வடக்கு மற்றும் தெற்கில் தற்போதுள்ள அதிக போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்யும் (எ.கா. மத்திய அதிவேக, புக்கிட் திமா நெடுஞ்சாலை) என எதிர்பார்க்கப்படுகிறது.

68-74 தாம்சன் சாலையில் உள்ள, 57 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி கட்டிடம், NSCன் தாம்சன் சாலையில் வரவிருக்கும் NSC சுரங்கப்பாதையில் இருந்து ஆறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 12 குடியிருப்பு வீடுகள் மற்றும் 4 கடைகளை கொண்டிருந்தது.

இதனால் அருகில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பு, LTA வால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்கள் 2020 ம் ஆண்டின் முற்பகுதியில் கட்டிடத்தில் ஆய்வை மேற்கொண்டனர். NSCக்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பு கட்டிடத்தின் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டின.

வலுப்படுத்தும் பணிகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, LTA குடியிருப்பாளர்களை கட்டிடத்திலிருந்து வெளியேற உதவியது. பிப்ரவரி 2021 க்குள், அனைத்து குடியிருப்பாளர்களும் கட்டிடத்திலிருந்து வெளியேறி மாற்று குடியிருப்பு அல்லது வணிக இடங்களை பெற்றனர்.

LTAவின் வலுப்படுத்தும் பணிகளின் வடிவமைப்பிற்காக மேலும் விரிவான சோதனைகளை நடத்தியது. வலுப்படுத்தும் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள தேவையானதை விட கட்டிடத்தின் வலிமை குறைவாக இருப்பதாக சோதனை முடிவுகள் சுட்டிக்காட்டின.

NSC சுரங்கப்பாதைக்கான பணிகளை தாங்குவதற்காக கட்டிடத்தின் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது நடைமுறைக்கு ஒத்து வராது மற்றும் ஆபத்தானது என்று தகுதி வாய்ந்த நிபுணர்களால் சோதனை செய்த BCAவும் கூறியது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக, 68-74 தாஏம்சன் சாலையை 68-74 தாம்சன் சாலைக்கு அருகிலுள்ள NSC சுரங்கப்பாதைக்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பு கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தது.

பாதிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதை சிங்கப்பூர் நில ஆணையம்(SLA) இன்று அரசிதழில் பதிவேற்றியது.. SLA மற்றும் LTA பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு கையகப்படுத்தல் செயல்முறை மூலம் அவர்களுக்கு உதவும் என கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(Image source: Google map- street view)